இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ‘ஜம்போ 3D’ திரைப்படம் ‘ஜம்புலிங்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MSG மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த K ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். “ ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. தற்பொழுது ‘விசில் போடு’ என்ற புரொமொ பாடலை வெளியிட்டுள்ளோம். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என இயக்குனர் ஹரீஷ் கூறினார்.